ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் நடிகராக அறியப்படுபவர் நடிகர் ரவிதேஜா. தொடர்ந்து போலீஸ் மற்றும் தாதா கதைகள் என ஆக்சன் ரூட்டில் பயணித்து வருபவர். அதே சமயம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவர் முழுக்க முழுக்க காதல் கதை அம்சம் கொண்ட 'நா ஆட்டோகிராப்' என்கிற படத்தில் நடித்திருந்தார். தமிழில் சேரன் இயக்கி நடித்து சூப்பர் ஹிட்டான 'ஆட்டோகிராப்' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இது. தெலுங்கிலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றாலும் ரவி தேஜாவுக்கு இந்த படம் பெரிய வெற்றியை தரவில்லை.
அதே சமயம் படம் வெளியாகி 20 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது வரும் காதலர் தின கொண்டாட்டமாக, அதே சமயம் ஒரு வாரம் தள்ளி பிப்ரவரி 22ம் தேதி இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழில் கதாநாயகியாக நடித்த கோபிகா, கனிகா இந்த ரீமேக்கிலும் இடம் பெற்றிருந்தார்கள். இவர்களுடன் பூமிகா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மரகதமணி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்; எஸ் கோபால் ரெட்டி இந்த படத்தை இயக்கி இருந்தார்.




