தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

2025ம் ஆண்டின் 10வது மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இந்த வாரம் அக்டோபர் 31ம் தேதி வருகிறது. அன்றைய தினம் வழக்கம் போல அதிகமான புதிய படங்கள் வெளியாக உள்ளன.
தற்போதைய நிலவரப்படி, “ஆண் பாவம் பொல்லாதது, ஆர்யன், மெஸன்ஜர், பரிசு, ராம் அப்துல்லா ஆண்டனி, தடை அதை உடை, தேசிய தலைவர், வட்டக்கானல்” ஆகிய எட்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளிக்கு வெளியான படங்கள் இரண்டு வாரங்களை நிறைவு செய்ய உள்ள நிலையில் அவற்றிற்கான கூட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது. அதனால், இந்த வாரம் வெளியாக உள்ள படங்களில் சில படங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் தியேட்டர்கள் கிடைக்கலாம்.
இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் சேர்த்தால் இந்த வருடத்தில் 10 மாதங்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 220க் கடந்துவிடும். அடுத்த இரண்டு மாதங்களில் 30 படங்கள் வந்தால் கூட மொத்த எண்ணிக்கை 250ஐக் கடந்துவிடும்.
இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக அமையும்.