விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் |

கடந்த சில நாட்களாகவே, சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், பள்ளிகளுக்கு தொடர்ந்து மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவதும், சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவருவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோரின் வீடு, அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்கு பிறகு அது புரளி என தெரியவந்தது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று (அக்.27) மர்ம நபர் மூலமாக மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் ரஜினிகாந்த் வீட்டை சோதனையிட சென்றனர்.
ஆனால், நடிகர் ரஜினி தனது வீட்டை சோதனையிட சம்மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் சோதனை செய்யாமலேயே போலீசார் திரும்பினர். மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.