‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 | அறிவிக்கப்பட்டவை 10... வந்தவை 7 : இன்றைய நிலவரம் | ஓடாமல் போன 'காட்டி' : அனுஷ்காவின் திடீர் முடிவு | இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ? | 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா | ஹவுஸ்புல் ஆகும் ஜப்பானியத் திரைப்படம் | கார்மேனி செல்வத்தின் கதை என்ன? |
கடந்த சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ஜனவரி 14ம் தேதி தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் 'சங்கராந்திகி வஸ்துனம்' என்கிற படம் வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்த இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். குடும்பங்கள் ரசிக்கும் விதமாக கலகலப்பான படமாக வெளியான இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாக மாறியது.
குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கேம் சேஞ்ஜர்' திரைப்படம் சரியாக போகாத நிலையிலும் புஷ்பா 2 திரைப்படம் ஓரளவுக்கு ஓடி முடிந்த நிலையிலும் இருந்ததால் இந்த படத்திற்கு போட்டியின்றி நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய நாயகன் வெங்கடேஷ், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறும்போது, “மீண்டும் சங்கராந்திகி வஸ்துனம் படத்தில் நிகழ்ந்ததை போன்ற அதே மேஜிக்கை இதன் இரண்டாம் பாகத்தில் நிகழ்த்துவேன்.. வரும் 2027 சங்கராந்தி பண்டிகை வெளியீடாக அந்த படம் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.