மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர் மகேஷ்பாபுவைத் தொடர்ந்து நடிகர் ரவி தேஜா ஐதராபாத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறந்திருக்கிறார். ஐதராபாத் நகரின் கிழக்குப் பகுதியில் வனஸ்தலிபுரம் என்ற இடத்தில் 'ஏஆர்டி சினிமாஸ்' என்ற பெயரில் அந்த மல்டிபிளக்ஸ் திறக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான 'எபிக் ஸ்கிரீன்' கொண்ட ஒரு தியேட்டருடன், மொத்தம் 6 தியேட்டர்கள் அந்த மல்டிபிளக்ஸில் உள்ளன. 4கே திரையீடு, டால்பி அட்மாஸ் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.
ஏசியன் சினிமாஸ் நிறுவனம் இதற்கு முன்பு மகேஷ்பாபுவுடன் இணைந்து 'எஎம்பி சினிமாஸ் - ஏசியன் மகேஷ் பாபு சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை ஐதரபாத்தில் திறந்தது. தற்போது அந்த நிறுவனம் ரவிதேஜாவுடன் இணைந்து 'ஏஆர்டி சினிமாஸ் - ஏசியன் ரவி தேஜா சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறந்துள்ளது.
தனுஷ் நடித்து வெளிவந்த 'குபேரா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் இந்த ஏசியன் குரூப் நிறுவனத்தின் ஒரு அங்கம்.
தெலுங்குத் திரையுலகத்தில் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சில நடிகர்கள் அடுத்து தியேட்டர் தொழிலிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சில தயாரிப்பாளர்கள்தான் தியேட்டர் தொழிலுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், எந்த நடிகரும் அதில் இன்னும் நுழையவில்லை. இதே ஏசியன் நிறுவனம் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழகத்தில் தியேட்டர் தொழிலில் ஈடுபடப் போவதாக முன்னர் செய்திகள் வெளிவந்தது.