ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் | கமல் படம் தான் ரஜினியின் கடைசி படமா... : உண்மை நிலவரம் என்ன? | 'பாகுபலி'க்கு வழிவிடுகிறாராம் விஷ்ணு விஷால்: 'ஆர்யன்' தெலுங்கு ரிலீஸ் தள்ளிவைப்பு | நவம்பர் 7ம் தேதி வெளியாகும் 'பிரிடேட்டர்' படத்தின் புதிய பாகம்: தமிழிலும் பார்க்கலாம் | முன்பதிவில் நல்ல வரவேற்பில் 'பாகுபலி தி எபிக்' | பிளாஷ்பேக்: தமிழில் டப் செய்யப்பட்ட கார்த்திக் படம் |

தெலுங்கில் நடிகர் ரவிதேஜாவின் 'மிஸ்டர் பச்சன்' திரைப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியான நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அவர் நடித்துள்ள 'மாஸ் ஜாதரா' திரைப்படம் வரும் அக்.,31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் பானு போகவரப்பு இயக்கியுள்ளார். 'தமாகா' படத்தை தொடர்ந்து இதில் மீண்டும் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா. இந்த படத்தில் ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரவிதேஜா.
இந்த நிலையில் தற்போது இந்த படம் அக்.,31க்கு பதிலாக ஒரு நாள் தள்ளி நவ.,1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. காரணம் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு 'பாகுபலி ; தி எபிக்' என்கிற பெயரில் ஒரே படமாக அதே அக்.,31ம் தேதி தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த நாளில் ரசிகர்களின் கவனம் முழுவதும் பாகுபலி பக்கம் தான் இருக்கும் என்பதால் அதனுடன் ஏற்படும் போட்டியை தவிர்ப்பதற்காக ஒரு நாள் தள்ளி நவ.,1ம் தேதி மாஸ் ஜாதரா படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.