மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
2025ம் ஆண்டில் முதன் பண்டிகை நாளான பொங்கல் முடிந்து இரண்டு வாரங்களாகிவிட்டது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஆறு படங்கள் வெளிவந்தன. ஜனவரி 10 அன்று 'வணங்கான், மெட்ராஸ்காரன்', 12 அன்று 'மத கஜ ராஜா', 14 அன்று 'காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்' ஆகிய படங்கள் வெளியாகின.
அவற்றில் 14ம் தேதி 'தருணம்' படத்தை ஓரிரு நாட்களில் தயாரிப்பாளர்களே திரும்பப் பெற்றுக் கொண்டு, இன்று ஜனவரி 31ம் தேதி மறு வெளியீடு செய்துள்ளார்கள். ஜனவரி 10ல் வெளியான 'மெட்ராஸ்காரன்' படம் ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடியது. 'வணங்கான்' படம் தற்போது சென்னை உட்பட சில நகரங்களில் மட்டும் ஓரிரு காட்சிகள் ஓடி வருகிறது.
12ம் தேதி வெளியான 'மத கஜ ராஜா' படம் இப்போதும் குறிப்பிடத்தக்க அளவிலான தியேட்டர்களில் ஓடி வருகிறது. இப்படம் மட்டும்தான் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இன்று தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது.
14ம் தேதி வெளியான 'காதலிக்க நேரமில்லை' மிகக் குறைவான தியேட்டர்களிலும், 'நேசிப்பாயா' ஓரிரு காட்சிகளிலும் மூன்றாவது வாரத்தில் தொடர்கிறது. 'நேசிப்பாயா' படம் தெலுங்கில் 'பிரேமிஸ்தே' என்ற பெயரில் டப்பிங் ஆகி நேற்று வெளியானது.
பொங்கல் படங்கள் அனைத்தும் இன்னும் சில நாட்கள் மட்டுமே ஓடி முடியும். அடுத்த வாரம் பிப்ரவரி 6ம் தேதி அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' வெளியாக உள்ளதால் அதற்குள் தியேட்டர்களை விட்டு தூக்கப்படலாம்.