ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் கதாநாயகனாக 25 படங்கள் தாக்குப் பிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அழகிருந்தும், திறமையிருந்தும் அதற்குள்ளாகவே காணாமல் போன நடிகர்களும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படியிருக்கும் தமிழ் சினிமாவில் மூன்று நடிகர்கள் ஒரே கால கட்டத்தில் 25வது படங்களைத் தொட்டிருப்பது ஆச்சரியம்தான்.
சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரது 25 படங்கள் பற்றிய அப்டேட்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகின. சிவகார்த்திகேயனின் 25வது படமாக 'பராசக்தி', ஜிவி பிரகாஷ்குமாரின் 25வதுபடமாக 'கிங்ஸ்டன்', விஜய் ஆண்டனியின் 25வது படமாக 'சக்தித் திருமகன்' ஆகியவை அமைந்துள்ளன.
சிவகார்த்திகேயன் 2012ல் வெளிவந்த 'மெரினா' படம் மூலமும், ஜிவி பிரகாஷ்குமார் 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படம் மூலமும், விஜய் ஆண்டனி 2012ல் வெளிவந்த 'நான்' படம் மூலமும் நாயகர்களாக அறிமுகமானார்கள். இவர்களில் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி இருவரும் இசையமைப்பாளராக இருந்த நடிகர்களானவர்கள். சிவகார்த்திகேயனும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. பாடல்களையும் எழுதியிருக்கிறார்.




