விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். தீவிர அரசியலில் இறங்குவதால் சினிமாவில் இருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் விஜய் 69 படம்தான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்னும் ஒரு படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் அதற்காக அவர் கதை எழுதி வருவதாகவும் சொல்கிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் 69வது படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரலாம். அதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.
அடுத்தாண்டு மே மாதம்தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். அதற்காக ஜனவரியில் இருந்து சுற்றுப் பயணம் செய்தாலே போதுமானது. மேலும் விஜய்யின் 69வது படம் தெலுங்கில் வந்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. தனது கடைசி படத்தை ஒரு நேரடிப் படமாக நடித்து முடிக்க விஜய் விரும்புகிறார் என்கிறார்கள். அதனால்தான் வெங்கட் பிரபுவை கதை எழுத சொல்லியிருக்கிறாராம். குறுகிய காலத்தில் அப்படத்தை எடுத்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். 'மாஸ்டர், லியோ' படங்களைத் தயாரித்த செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தைத் தயாரிக்கலாம் என்று தகவல்.