துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பிரபல இயக்குனரால் பஞ்சாபி நடிகை ஒருவரின் சினிமா வாழ்க்கை நாசமானது என குறிப்பிட்டார். இந்த விஷயம் அப்போது பரபரப்பானது.
இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்ட பதிவில், ‛‛தெலுங்கு நடிகர் சங்கத்தில் இக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீது நீண்டநாட்களுக்கு முன் புகார் அளித்தேன். இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் வாழ்க்கையை நாசமாக்கிய அவரை திரைத்துறையினர் ஆதரிக்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ். இவர் மீது பூனம் கூறிய குற்றச்சாட்டு தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தெலுங்கு நடிகர் சங்கம் தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளது.