ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? |
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி. தெலுங்கில் பிஸியாக நடித்து வந்தாலும் தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து 'சங்கராந்திகி வஸ்துன்னம்' எனும் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர் தி கோட் படம் குறித்து கூறுகையில், "கடந்த வருடத்தில் விஜய்யுடன் இணைந்து 'தி கோட்' படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நான் நடித்த ஸ்ரீ நிதி கதாபாத்திரத்திற்காக என்னை பலரும் கேலியும், கிண்டலும் செய்து சமூக வலைதளங்களில் டிரால் செய்தனர். இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன். பின்னர் சில நாட்களில் லக்கி பாஸ்கர் படம் வெளியானது. அதில் நான் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது" என தெரிவித்துள்ளார்.