பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? |
தமிழில் நடிகர் கலையரசன் மெட்ராஸ் படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு அதே கண்கள், குதிரைவால், ஹாட் ஸ்பாட், ராஜா மந்திரி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்துள்ளார். இது அல்லாமல் சார்பட்டா பரம்பரை, கபாலி, ஜகமே தந்திரம், வாழை, தேவரா உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இதில் பெரும்பாலான படங்களில் அவர் கதாபாத்திரம் இறந்து போகும் கதாபாத்திரமாக உள்ளதால் சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் கலையரசன் கதாபாத்திரம் வந்தாலே இறந்து விடும் என மீம்ஸ் உருவாக்கி கலாய்த்தனர்.
இந்த நிலையில் மெட்ஸ்காரன் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கலையரசன் மேடையில் கூறுகையில், "ஒரு படத்தின் கதையை உருவாக்கி எழுதி வரும் போதே ஒரு கதாபாத்திரம் சாக போகிறதென்றால் என் பெயரை எழுதி விடுவார்கள் போல, இனி நான் இரண்டாம் கட்ட நாயகனாக நடிக்க மாட்டேன். முதன்மை கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்" என்றார்.