ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
எஸ்.ஆர்.புரொடக்ஷன் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிக்கும் படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளனர். இந்த படத்தில் 'அலைபாயுதே' படத்தில் இடம்பெற்ற "காதல் சடுகுடு" பாடல் ரீமேக் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 'அலைபாயுதே' இயக்குனர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆடியோ நிறுவனமான சரிகம ஆகியவை முறையான அனுமதி வழங்கி உள்ளனர்.
பாடல் வெளியீட்டு விழாவில் இதுகுறித்து நடிகை நிஹாரிகா கூறும்போது “படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எனது கனவு நனவாகியிருக்கிறது. மணி சார் மாதிரி ஜாம்பவான் செய்த பாடல் எங்களுக்குக் கிடைத்தது வரம். என்னை ஆட வைத்த சதீஷுக்கு நன்றி. எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது, ஆனால் பாடல் பார்த்து பாராட்டுக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசும்போது “அலைபாயுதே என் பேவரைட் பிலிம், இந்தப்பாடலைத் தந்த மணிரத்னம் சார், ஏ ஆர் ரஹ்மான் சார், சரிகமாவிற்கு நன்றி. இந்தப்பாடல் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் ஷேன் நிகாம் பேசும்போது, “என்னை ஆட வைத்ததற்கு நன்றி. நிஹாரிகா நல்ல ஒத்துழைப்பு தந்தார். வாலி மோகன் தாஸ் இந்தப்படம் தந்ததற்கு நன்றி. தமிழ்ப் படங்களின் ரசிகன் நான், என் முதல் தமிழ்ப்படம் இது, கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி” என்றார்.