பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ் சினிமாவில் இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்தவர் மறைந்த நடிகர் முரளி. கன்னட இயக்குனர் சித்தராலிங்கையாவின் மகன். 1984ல் வெளிவந்த 'பூ விலங்கு' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தனது 46வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார்.
முரளியின் மூத்த மகனான அதர்வா, 'பாணா காத்தாடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அவரது இளைய மகன் ஆகாஷ் முரளி ஜனவரி 14ல் வெளியாக உள்ள 'நேசிப்பாயா' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
முரளி அறிமுகமான 'பூ விலங்கு' படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. அதர்வா அறிமுகமான 'பாணா காத்தாடி' படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா. தற்போது ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகப் போகும் 'நேசிப்பாயா' படத்திற்கும் யுவன் தான் இசை. முரளி குடும்பத்தில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்திருப்பது ஒரு ஆச்சரிய ஒற்றுமை.