துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான உன்னி முகுந்தன் கடந்த சில நாட்களாகவே மிகுந்த உற்சாகத்திலும் சந்தோஷத்திலும் இருக்கிறார். காரணம் சமீபத்தில் வெளியான அவரது ஆக்ஷன் திரைப்படமான மார்கோ மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மேலும் ஹிந்தியிலும் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது முதன் முறையாக கொரியாவிலும் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கொரியாவில் திரையிடப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் என்றால் அது பாகுபலி தான். அதற்கு அடுத்து இரண்டாவது படம் என்கிற பெருமையை மார்கோ பெற்றுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள், உச்சபட்ச வன்முறை ஆகியவற்றுடன் இந்த படம் உருவாகி இருந்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இதனை கொடுத்திருப்பதால் படம் திரையிட்ட இடங்களில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதைகளையும் ஆக்ஷன் படங்களையும் கொடுக்கக்கூடிய இயக்குனர் ஹனீப் அதேனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.