ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் இளம் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் 'மார்கோ' என்கிற திரைப்படம் வெளியானது. இயக்குனர் ஹனிப் அதேனி இயக்கிய இந்த படம் முழு நீள ஆக்சன் படமாக அதேசமயம் அதீத வன்முறை காட்சிகள் கொண்ட படமாக உருவாகி இருந்தது. இதனால் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டு இந்த படம் வெளியானது. ஆனாலும் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட ஏ சான்றிதழ் காரணமாக இந்த படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் சாட்டிலைட் உரிமை ஏற்கனவே தணிக்கை வாரியத்தால் மறுக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்த நிலையில் தான் சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்கோ படத்தின் பெயரை குறிப்பிடாமல், அதே சமயம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படங்கள் குறைந்து, அதீத வன்முறை கொண்ட படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன என்று குற்றம் சாட்டி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது தணிக்கை வாரியத்தின் மூலம் இந்த படத்தை ஓடிடியில் ஒளிபரப்ப கொடுக்கப்பட்டிருக்கும் உரிமையையும் ரத்து செய்யும்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓடிடியிலும் மார்கோ தடை செய்யப்படுமா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.