இசை அமைப்பாளர் பயணம் தொடரும் : சக்திஸ்ரீ கோபாலன் | கரம் மசாலா : விமல், யோகி பாவுவின் காமெடி படம் | பிளாஷ்பேக் : ரஜினி கேட்டும் கிளைமாக்ஸை மாற்றாத மகேந்திரன் | பிளாஷ்பேக்: சினிமாவை உதறிவிட்டு ராணுவத்திற்கு சென்ற நடிகர் | மீண்டும் கைகோர்க்கும் 'பேட்ட' கூட்டணி | ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு நிறைவடைந்தது | ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்' | பூரி ஜெகன்நாத் உடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி | கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி | 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' |
'ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி' உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கி உள்ள படம் 'திரு மாணிக்கம்'. சமுத்திரகனி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் நடித்துள்ளனர். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு உள்பட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த டிசம்பர் 27ல் வெளியானது.
இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஒரு நல்ல படத்துக்கு அடையாளம், படம் பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள், கதாபாத்திரங்கள் ஒரு மூன்று, நான்கு நாட்களுக்காவது நினைவில் வந்துகொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் எதாவது ஓர் நல்ல விஷயம், நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்கணும் என்ற எண்ணம் உருவாகணும். அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு.மாணிக்கம் என்கிற படம் ஓர் அற்புதமான படைப்பு.
உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனத்தை எழுதி சிறப்பாக இயக்கியிருக்கும் நந்தா பெரியசாமி, தான் ஓர் அற்புதமான இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த திரைப்படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு ஆகியோருக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், இந்த படத்தை தயாரித்திருக்கும் ரவி குமார் மற்றும் என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பகிர்ந்த சமுத்திரகனி, 'நேர்மையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி' எனக்கூறி நன்றி தெரிவித்தார்.