காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கார்த்தி நடித்த 'விருமன்', சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' போன்ற படங்களில் நடித்தவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர். இவர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி உடன் இணைந்து 'நேசிப்பாயா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் ரேஸிலிருந்து பின் வாங்கியதால் தற்போது பல புதிய படங்களும் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவித்து வருகிறார்கள்.
அந்த பட்டியலில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள நேசிப்பாயா படமும் இணைந்துள்ளது. ஏற்கனவே ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள நேசிப்பாயா படமும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அந்த வகையில் முதன்முறையாக அப்பா இயக்கிய படத்துடன் அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் மோதப் போகிறது.