ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தொடங்கப்பட்டு பின்னர் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், அந்த கேப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்ற படத்திலும் நடிக்க தொடங்கினார் அஜித்குமார். இந்த நிலையில் தற்போது 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' என்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டு படங்களுக்குமே அஜித் குமார் டப்பிங் பேசி விட்டார்.
இப்படியான நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி திடீரென்று பின்வாங்கி விட்டது. இதன் காரணமாக குட் பேட் அக்லி படத்தை தொடங்கியபோதே பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்ததால், விடாமுயற்சிக்கு பதிலாக பொங்கல் தினத்தில் குட் பேட் அக்லி திரைக்கு வருமா என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த நேரத்தில் அப்பட வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, குட் பேட் அக்லி படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்ட போதும், இன்னும் ஓரிரு தினங்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில்தான் குட் பேட் அக்லி திரைக்கு வரும் என்கிறார்கள். அதனால் பொங்கல் ரிலீஸில் இருந்து விடாமுயற்சி பின்வாங்கி விட்ட நிலையில், அந்த இடத்தை குட் பேட் அக்லி படம் நிரப்புவதற்கு வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.