ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்து இந்த வருடம் வெளிவந்த படம் 'குட் பேட் அக்லி'. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்ற ஒரு படம். தெலுங்கில் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள 'ஓஜி' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. 'ஓஜி' படத்தின் கதை 'குட் பேட் அக்லி' படத்தின் கதை போலவே உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
அவற்றிற்கு 'ஓஜி' படத்தின் இயக்குனர் சுஜித் பதிலளித்துள்ளார். “ஆதிக் ரவிச்சந்திரன் 'குட் பேட் அக்லி' படத்தின் ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பிக்கும் முன்பே, நான் 'ஓஜி' கிளிம்ப்ஸை வெளியிட்டேன். அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் என்னையும் என் வேலையையும் உண்மையாக விரும்புகிறார்.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' காலத்திலிருந்து அவரைத் தெரியும். 'குட் பேட் அக்லி' குழு 'ஓஜி சம்பவம்' என்ற பாடலை வெளியிட்டது. பொதுவாக, முதலில் வெளியாகும் பொருள் அசலாகக் கருதப்படும். அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை, ஆனால் என் படம் விமர்சிக்கப்பட்டது.
எனக்கு 'மார்க் ஆண்டனி' பிடித்திருந்தது, ஆதிக் மிகவும் திறமையானவர் என்று உணர்ந்தேன். 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தார். அஜித் படத்திற்கு அவர் ஒப்பந்தமாகும் நேரத்தில், நாங்கள் ஏற்கனவே 'ஓஜி' படத்தில் அவரது பகுதிகளை படமாக்கத் தொடங்கியிருந்தோம். எங்கள் படம் தாமதமானதால், ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதவை," என்று கூறியுள்ளார்.