காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
பண்டிகை நாட்களுக்கு முன்பாக எப்போதுமே ஒரு இடைவெளி வரும். அப்போது புதிய படங்களை திரையிட முன் வர மாட்டார்கள். கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பொங்கல் வரையிலான இடைப்பட்ட இரண்டு வாரங்களுக்கு தியேட்டர்களுக்கு படங்கள் இருக்காது.
இப்போதெல்லாம் எந்தப் படம் வந்தாலும் இரண்டு வாரங்கள் தாக்குப் பிடிப்பதே அதிகம். 2024ம் ஆண்டில் டிசம்பர் 20ல் 'விடுதலை 2' படம்தான் ஒரளவுக்குப் பெரிய படமாக வந்தது. அந்தப் படமும் ஒரு வாரம்தான் நன்றாக ஓடியது. வருடக் கடைசி வாரமான டிசம்பர் 27ல் வெளிவந்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
இதனால், கடந்த சில நாட்களாகவே பல சிங்கிள் தியேட்டர்களை மூடியிருக்கிறார்கள். சென்னை உள்ளிட்ட மாநரங்களில் கூட இப்படித்தான் நிலைமை இருககிறது. சில தியேட்டர்களில் மட்டும் பத்துப், பதினைந்து பேர் வந்தால் கூட போதும் என ஓட்டி வருகிறார்கள்.
பொங்கலுக்கும் டாப் வரிசை நடிகர்களின் படங்கள் வராததால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் தியேட்டர்கார்கள்.