இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சென்னை மாநகரின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்று அசோக் நகர் பகுதியில், அசோக் பில்லர் அருகாமையில் அமைந்துள்ள உதயம் தியேட்டர் காம்ப்ளக்ஸ். 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தியேட்டர். உதயம், சூரியன், சந்திரன் என மூன்று தியேட்டர்களுடன் வெற்றிகரமாக நடந்து பின்னர் மினி உதயம் என நான்காவது தியேட்டரும் உருவாக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதமே இந்தத் தியேட்டர் மூடப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதன் பிறகு சில மாதங்கள் படங்கள் திரையிடப்பட்டு வந்தது. கடந்த வாரத்துடன் திரையிடலை நிறுத்திக் கொண்டது உதயம் தியேட்டர் வளாகம்.
கட்டுமான நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த வேலைகள் முடிவடைந்துவிட்டதால் தியேட்டரை மூடிவிட்டார்கள். விரைவில் தியேட்டர்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் வேலைகள் ஆரம்பமாக உள்ளது.
சென்னை மாநகரின் முக்கியமான பகுதியில் அமைந்த பெருமை வாய்ந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் மூடப்படுவது சினிமா ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகனிர் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.