இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 5ம் தேதி வெளியான படம் 'புஷ்பா 2'. 25 நாட்களில் இப்படம் 1760 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ஹிந்தியில் மட்டும் வசூலான தொகை 770 கோடி ரூபாய்.
வெளிநாடுகளில் வசூலான தொகை மட்டும் சுமார் 265 கோடி ரூபாய். வெளிநாட்டு உரிமையாக 100 கோடி ரூபாய்க்கு இப்படம் விற்கப்பட்டுள்ளது. வசூலான தொகையுடன் ஒப்பிட்டால் படம் லாபத்தைத்தான் கொடுத்துள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 15 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 128 கோடி ரூபாய். அமெரிக்காவில் இப்படத்தின் உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டதால் அங்கு மட்டும் குறைவான லாபம்தான் கிடைத்துள்ளதாம். மற்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க லாபத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல்.
புதிதாக வெளியான ஹாலிவுட் படங்களின் வரவால் வெளிநாடுகளிலும் இப்படத்தின் ஓட்டம் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டது. அதனால், 2000 கோடி வசூலை இந்தப் படம் தொடும் வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள்.