ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

இயக்குனர் பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் வயதும் 60 ஆகிவிட்டது. இந்நிலையில், 'வணக்கான்'க்கு பின் அடுத்த படத்தை இயக்க ரெடியாகி வருகிறார். அதற்கான கதை விவாதம் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த படத்தில் முன்னணி நடிகர்கள் யாரும் ஹீரோவாக நடிக்கவில்லை. தமிழக அளவில் புகழ்பெற்ற மூன்றெழுத்து வணிக குடும்பத்தை சேர்ந்த வாரிசு ஒருவரை ஹீரோ ஆக்குகிறாராம் பாலா. அவருக்கு நடிப்பு பயிற்சி கொடுத்து வருகிறாராம்.
விரைவில் பாலாவின் புதுப்பட அறிவிப்பு வெளியாக உள்ளது. பாலாவின் முதற்பட ஹீரோ விக்ரம் 'வர்மா' பட பிரச்னைகள் காரணமாக இன்னமும் கோபத்தில் இருக்கிறாராம். இருவரும் பேசிக்கொள்வது இல்லை. பாலாவிடம் தொழில் பயின்ற அமீர், சசிகுமார் ஆகியோரும் கூட பாலாவிடம் நெருக்கமாக இல்லை.




