2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சமீபத்தில் வெளியான 'ரைட்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார் அக்ஷரா ரெட்டி. 2019ம் ஆண்டு நடந்த 'மிஸ்.குளோபல் இந்தியா' போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றவர். இவரது தந்தை முன்னாள் ராணுவ அதிகாரி.
தமிழ் சினிமாவில் அறிமுகமானது குறித்து அக்ஷரா ரெட்டி கூறும்போது “எனது தந்தை சுதாகர் ரெட்டி,. டில்லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடத்தின் புல்லட் ப்ரூப் பாதுகாப்புக்கான அத்தனை தொழில்நுட்ப அம்சங்களையும் அவர்தான் செய்து கொடுத்தார்.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மார்ஷல் ஆர்ட்ஸ், மற்றும் பாக்சிங் பயிற்சி பெற்றிருக்கிறேன். சினிமாவில் ஆக்சன் ஹீரோயினாக நடிக்க ஆசை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடியாக ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் வில்வித்தை பயிற்சியும் பெற்றுக் கொண்டு வருகிறேன். பைக் ஓட்டுவேன், குதிரை ஏற்றம் தெரியும். மேலும் சிறு வயதிலிருந்து சங்கீதம் பயின்றிருக்கிறேன்” என்றார்.