புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
ஜெமினி ஸ்டுடியோ மூலம் ஏராளமான படங்களை தயாரித்த எஸ்.எஸ்.வாசன் ஆரம்பத்தில் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தார். அவருக்கு ஒரு ஸ்டூடியோ நடத்த வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அப்போதைய பிரபலமான இயக்குனர் கே.சுப்பிரமணியம் நடத்தி வந்த மோசன் பிக்சர்ஸ் கம்பெனி ஏலத்துக்கு வந்த போது அதனை எஸ் எஸ் வாசன் வாங்கி 'ஜெமினி ஸ்டுடியோ' என்று பெயர் மாற்றினார்.
இந்த ஸ்டூடியோவில் முதலில் தயாரான திரைப்படம் 'மதன காமராஜன்'. இந்த படத்தை திண்டுக்கல்லை சேர்ந்த 20 தொழிலதிபர்கள் இணைந்து தயாரித்தார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் பாதியிலேயே நின்றது. இதனால் அந்தப் படத்தை தானே தயாரிக்க முன் வந்தார் வாசன்.
இந்த படத்தின் மூலம் தயாரிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட வாசன், அதன் பிறகு ஏராளமான படங்களை தயாரித்தார். இந்த படம் நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டது. 1941ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சீனி சடகோபன், கேஎல்வி வசந்தா, என்.கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு, டி.எஸ். துரைராஜ் எம்.டி.ராஜம்மா உள்பட பலர் நடித்திருந்தனர். பி.என். ராவ் என்பவர் இயக்கியிருந்தார்.
ஒரு ஓவியத்தில் உள்ள அழகான பெண்ணை பார்க்கும் இளவரசன் அந்தப் பெண்ணைத்தான் மணப்பெண் என்று பிடிவாதமாக இருந்து மனநலம் பாதிக்கப்பட்டதால் அந்தப் பெண்ணை தேடி கண்டுபிடித்து அவனுக்கு மனம் முடித்து வைப்பது மாதிரியான கதை. படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது . ஜெமினி ஸ்டுடியோவும் தொடர்ந்து படங்களை தயாரிக்க தொடங்கியது.