ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
மலையாளத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். நீண்ட வருடங்களாக அவருக்கென ஒரு தனி பாணியில் படங்களில் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் முதன் முதலில் உருவான 'பரோஸ் 3டி' படம் கடந்த வாரம் பான் இந்தியா படமாக வெளியானது.
ஆனால், படத்திற்கு கேரளாவிலேயே வரவேற்பு கிடைக்கவில்லை. மோகன்லால் நடித்து வெளிவந்த படங்களில் பெரிய பிளாப் படமாக அப்படம் அமைந்துவிட்டது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் கடந்த ஆறு நாட்களில் வெறும் 9 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் கடந்த வருடம் மட்டும் சுமார் 700 கோடி நஷ்டம் என்று சொன்னார்கள். இந்தப் படத்தின் நஷ்டத்தையும் சேர்த்தால் அது 800 கோடிக்கும் அதிகமாக வரும்.