புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி பான் இந்தியா படமாக ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு ராம் சரண் நடித்து வெளியாகும் படம் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சுமார் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் அனைத்து ஏரியா வியாபாரங்களும் நடந்து முடிந்துவிட்டது. வெளியீட்டிற்கு முன்பாகவே இந்தப் படம் மொத்த பட்ஜெட்டில் பாதியை எடுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என தயாரிப்பாளருக்கு நேரடியாக வரும் வருவாய் மூலம் மட்டுமே 150 கோடிக்கும் அதிகமாக வந்துவிட்டதாம். தியேட்டர் வசூல் மூலம் மீதி பாதி வருவாயும் நிச்சயம் வந்துவிடும் என்கிறார்கள்.
இப்படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் மற்றுமொரு பெரிய வசூல் படமாக மாற்ற வேண்டும் என படக்குழுவினல் பலவித புரமோஷன்களில் இறங்கியுள்ளார்கள்.