தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சென்னை: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹேம்நாத் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்தது.
இந்நிலையில், இன்று (டிச.,31) சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஓய்வு பெற்ற காவலரான அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. காமராஜ் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.