9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

தமிழில் 'ஜென்டில்மேன்' தொடங்கி '2.ஓ' படம் வரை ஷங்கர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்று வந்தன. ஆனால் கமல் நடிப்பில் இயக்கிய 'இந்தியன்-2' படம் மட்டுமே அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் தற்போது ராம்சரண் நடிப்பில் தான் இயக்கி உள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை வெற்றி படமாக்கி விட வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார் ஷங்கர்.
'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு பிறகு ராம்சரண் நடிப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்தி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய படக்குழு, தற்போது தொடர்ந்து புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜுவும் புரமோஷனில் ஈடுபட்டுள்ளாராம். அதோடு மட்டுமின்றி இயக்குனர் ஷங்கரிடத்திலும் 'கேம் சேஞ்சர்' படத்தை இன்னும் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க அனைத்து ஊடங்களுக்கும் தொடர்ந்து பேட்டிகள் கொடுக்குமாறும் ஒரு கோரிக்கை வைத்துள்ளாராம். அதன் காரணமாகவே ஒரு பக்கம் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இயக்குனர் ஷங்கர், ஒவ்வொரு நாளும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதிலும் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறாராம்.