விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
பாடலாசிரியரான பா.விஜய், இளைஞன், ஸ்டாரபெரி, நய்யப்புடை, ஆருத்ரா உள்ளிட்ட படங்களில் நடிகராகவும், ஸ்டாரபெரி, ஆருத்ரா ஆகிய படங்களில் இயக்குனராகவும் பன்முகம் காட்டியவர். தற்போது நடிகர்கள் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா ஆகியோரை வைத்து 'அகத்தியா' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் யோகி பாபு, விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. இப்போது இத்திரைப்படம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.