ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இப்படத்தின் 50வது நாள்.
இந்த வருடத்தில் ஒரு சில படங்கள்தான் 50 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் நிறைய லாபத்தைக் கொடுத்துள்ளது. அதனால், தெலுங்கிலும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் விரிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் ஆகியவை வெளியாக உள்ளன. 'அமரன்' படத்தின் வெற்றியால் இந்தப் படங்களுக்கான வியாபாரத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.