லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவில் மல்டிஸ்டார் படங்களைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். முன்னணியில் இருக்கும் நடிகர்கள் யாரும் ஒருவருடன் மற்றொருவர் இணைந்து நடிக்கவே மாட்டார்கள். ஏன், இரண்டாம் நிலை நடிகர்கள் கூட அப்படியான படங்கள் வந்தால் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். தோற்றாலும் பரவாயில்லை தனி நாயகனாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிப்பார்கள்.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2018ல் 'செக்கச் சிவந்த வானம்' படம் ஒரு மல்டிஸ்டார் படமாக வெளிவந்தது. விஜய் சேதுபதி, சிலம்பரசன், அருண் விஜய் ஆகியோருடன் அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு முழுமையான மல்டிஸ்டார் படமாக வந்தது.
அதற்கடுத்து ஆறு வருடங்களுக்குப் பிறகு தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் மல்டிஸ்டார் படம் ஒன்று உருவாக உள்ளது. சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாக உள்ள இப்படத்தில் அவருடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடிக்கிறார்கள். சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'புறநானூறு' படம்தான் இது. அதே தலைப்பு இப்படத்திற்கு அறிவிக்கப்படுமா அல்லது வேறு தலைப்பா என்பது இனிமேல்தான் தெரியும்.
இப்படத்திற்காக அனைத்து நடிகர்களும் 60 கால கட்டத் தோற்றத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ள உள்ளார்கள் என்பது கூடுதல் தகவல்.