32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விடுதலை 2'. இப்படம் இந்த வாரம் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக அதே நாளில் மேலும் சில படங்கள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அப்படங்களைத் தற்போது தள்ளி வைத்துவிட்டனர். அதனால், எந்தவிதமான போட்டியும் இல்லாமல் அப்படம் அன்று வெளியாக உள்ளது.
இந்த வருடம் முடிய அடுத்த வாரம் மட்டுமே உள்ளதால், அடுத்த வாரம் டிசம்பர் 27ல் நிறைய படங்களை எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு 'அலங்கு, கஜானா, ராஜாகிளி, த ஸ்மைல் மேன், திரு மாணிக்கம்,' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வெளியாக உள்ள படங்களும் சிறிய பட்ஜெட் படங்கள் என்பதால் 'விடுதலை 2'க்கு பெரிய போட்டி அடுத்த வாரமும் இல்லை. படம் நன்றாக இருந்தால் அடுத்த வாரம் வரையிலும் தாக்குப் பிடித்து ஓட வாய்ப்புள்ளது.
கடந்த வருடம் வெளிவந்த 'விடுதலை' படத்தின் முதல் பாகம் 50 கோடி வரை வசூலித்ததாகத் தகவல். விஜய் சேதுபதி நடித்து இந்த வருடம் வெளிவந்த 'மகாராஜா' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு இந்தப் படமும் வசூலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.