டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கடைக்குட்டி தம்பியாக வந்து ரசிகர்களை கவர்ந்தவர் சரவண விக்ரம். அம்மா இறப்பது போன்ற எபிசோடில் இவர் செய்த பெர்பாமன்ஸை கண்டு பலரும் வியந்து பாராட்டி வந்தனர். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 7ல் எண்ட்ரி கொடுத்த சரவண விக்ரம் அதில் சொல்லிக்கொள்ளும் வகையில் எதையும் செய்யவில்லை. அதற்கு பதிலாக சிலருக்கு மட்டும் சப்போர்ட் செய்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து ட்ரோலில் சிக்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அவர் சீரியலிலும் நடிக்கவில்லை. நீண்ட நாட்களாக ஆக்டிவாக இல்லாமல் இருந்த சரவண விக்ரம் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகாக இருக்கிறார். சரவண விக்ரம் நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்குகிறார். அந்த படத்திற்கான படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.




