வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. பாகுபலி 1, 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் இந்திய அளவில் பிரபலமானார். ஆனால் அதன்பின் அவர் நடித்த படங்கள் பெரிதாக போகவில்லை. கடைசியாக கடந்தாண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிசிட்டி என்ற படத்தில் நடித்தார். இந்தபடம் பெரியளவில் போகவில்லை.
தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ள இவர் கிரிஷ் இயக்கத்தில் ‛காதி' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ வெளியானது. அதில் அனுஷ்கா ஒருவரின் கழுத்தை அறுக்கும் படியான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது 2025, ஏப்., 18ல் படம் ரிலீஸ் என வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.