32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
‛அமரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படங்கள் தவிர்த்து சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் அவர் நடிக்கிறார். சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு படம் தான் சிவகார்த்திகேயனுக்காக இவரின் 25வது படமாக உருவாகிறது. படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. நேற்று முதல் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, டான் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. பின்னர் அவர் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக அதர்வா நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் நேற்று படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன் உடன் ஜெயம் ரவி, அதர்வா இருவரும் பங்கேற்றனர். அதோடு படத்தின் அறவிப்பிலும் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயம் ரவியும் இப்படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மேலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்து தமிழில் அறிமுகமாகிறார். தெலுங்கில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா தற்போது தமிழில் களமிறங்குகிறார்.