100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் 'தண்டேல்', ஹிந்தியில் 'ராமாயணா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக எந்தவிதமான கோபமான பதிவையும் அவருடைய சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டதில்லை. இந்நிலையில் நேற்று வெளியான செய்தி ஒன்றிற்கு கோபமான பதிவைப் பதிவிட்டுள்ளார். அதாவது, ராமாயணம் படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி படப்பிடிப்பு முடியும்வரை அசைவ உணவுகளை தவிர்ப்பதாகவும் இதற்காக அவர் ஹோட்டலில் கூட சாப்பிடாமல், வெளியூர்களுக்குச் செல்லும்போது கையோடு சமையல்காரர்களை அழைத்துச் செல்வதாகவும் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கோபமாக ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.
“அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடனோ, இல்லாமலோ பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் நான் அமைதியாக இருக்கவே விரும்புவேன். ஆனால் தொடர்ந்து இவ்வாறு நடப்பதால், குறிப்பாக எனது படத்தின் வெளியீட்டின் போதோ, அறிவிப்புகள் வெளியாகும் சமயங்களிலோ இது போன்ற வதந்திகள் பரப்பப்படுவதால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.
அடுத்த முறை ஏதேனும் பிரபலமான பக்கமோ, ஊடகமோ, தனிநபரோ, கிசுகிசு (அ) செய்தி என்ற பெயரில் இதுபோன்ற தவறான தகவலை பரப்பினால், அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்,” எனப் பதிவு செய்துள்ளார்.