ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று. நான்கு நாட்களில் 800 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஏற்கனவே கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் வெற்றி, அதன் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு என எல்லாமாக சேர்ந்து இந்த இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அது ரிலீசுக்கு பின்பும் வெற்றியாக எதிரொலித்தது. அதே சமயம் இந்த படம் ரிலீஸ் ஆன ஹைதராபாத்தில் ஒரு பெண் எதிர்பாராத விதமாக தியேட்டர் நெரிசலில் சிக்கி மரணம் அடைந்த துயரமான சம்பவம் நடைபெற்றது. அதே சமயம் கேரளாவில் கொச்சியில் இந்த படம் திரையிடுவதில் ஒரு காமெடியான நிகழ்வும் நடைபெற்றுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள சினி பாலிஷ் என்கிற மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் ஒன்றில் புஷ்பா 2 திரைப்படம் மாலை ஆறு மணி காட்சியாக திரையிடப்பட்டது. எதிர்பாராத விதமாக இடைவேளைக்குப் பிறகு துவங்கும் படக்காட்சியில் ஆரம்பத்திலிருந்து ஓட துவங்கியது. படம் பார்த்த பலருக்கும் டைட்டில் கார்டு கூட இல்லாமல் படம் ஓடுகிறதே என ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் படம் பார்த்த அனைவருமே அப்போதுதான் புதிதாக படத்தை பார்ப்பதால் ஒருவேளை இது திரைக்கதையில் ஒரு புதிய யுக்தியாக நான் லீனியர் முறையில் கதை சொல்கிறார்களோ என்பது போல நினைத்துக் கொண்டு படத்தின் சுவாரசியத்துடன் ஒன்றிவிட்டார்கள்.
ஆனால் கிட்டத்தட்ட 1 3/4 மணி நேரம் படம் ஓடி என்ட் டைட்டில் கார்டு ஓட துவங்கியதும் தான் படமே முடிந்து விட்டது என்றும் தாங்கள் பார்த்தது முதல் பாதியை அல்ல என்றும் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. உடனே அனைவரும் தியேட்டர் நிர்வாகத்துடன் சண்டை போட துவங்கி உள்ளனர். பலரும் தங்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இன்னும் சிலரோ எங்களுக்கு இப்போதே முதல் பாதியை திரையிடுங்கள் என்று அங்கேயே பிடிவாதமாக அமர்ந்து விட்டனர்.
ஆனால் மீண்டும் முதல் பாகத்தைப் பார்க்க பொறுமை இல்லாமல் கிளம்பிய ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்ட நிர்வாகம், முதல் பாகத்தை பார்த்து விட்டு தான் கிளம்புவோம் என்று பிடிவாதம் பிடித்த சிறிய எண்ணிகையிலான ரசிகர்களுக்கு தனியாக ஒரு சின்ன திரையரங்கில் முதல் பாகத்தை மட்டும் ஒன்பது மணிக்கு மேல் திரையிட்டு காட்டி அனுப்பி வைத்துள்ளனர்.