ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
சசிகுமார், சிம்ரன் இருவரும் நடிப்பில் உருவாகும் 'டூரிஸ்ட் பேமிலி' என்கிற புதிய படம் சமீபத்தில் டைட்டிலுடன் அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே சசிகுமார் படத்தின் டைட்டில்கள் எல்லாமே கிராமத்து பின்னணி கொண்டதாகவே தமிழிலேயே அமைந்திருக்கும். ஆனால் முதன்முதலாக ஒரு ஆங்கில டைட்டில் கொண்ட படத்தில் சசிகுமார் நடிக்கிறார். ஏற்கனவே 'பேட்ட' படத்தில் சசிகுமார், சிம்ரன் இருவரும் நடித்திருந்தாலும் இவர்கள் இணைந்து நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. இந்த நிலையில் முதன்முறையாக இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.
இவர்களது மகனாக டீன் ஏஜ் பையனாக பக்கத்து வீட்டு பையன் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் மலையாள திரை உலகை சேர்ந்த இளம் நடிகர் மிதுன் ஜெய்சங்கர் நடிக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடித்த 'ஆவேசம்' படத்தில் அவர் அன்புடன் நேசிக்கும் மூன்று கல்லூரி மாணவர்களில் முக்கியமான ஒருவராக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தது. இதற்கு பரிசாக தற்போது தமிழில் என்ட்ரி கொடுக்கும் வாய்ப்பு இந்த படத்தின் மூலம் அமைந்துள்ளது, அபிஷன் ஜீவிந்த் என்பவர் இயக்கும் இந்த படத்தில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஒரு தம்பதி இங்குள்ள வாழ்க்கை முறைக்கு எப்படி தங்களை பொருத்திக் கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாகவும் காமெடியாகவும் சொல்லி இருக்கிறார்களாம்.