பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் |

தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. கடந்தவாரம் அல்லு அர்ஜுன் உடன் இவர் இணைந்து நடித்து வெளியான ‛புஷ்பா 2' படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 4 நாட்களில் ரூ.824 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்கு பின் ராஷ்மிகா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛தி கேர்ள் பிரண்ட்'. நடிகர், இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்கி உள்ளார். நாயகியை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. காதலுக்கும், நாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் இருக்கும் என டீசரை பார்க்கையில் புரிகிறது. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர்.




