மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
நடிகை தமன்னா ஜெயிலர் மற்றும் ஸ்ட்ரீ-2 உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டாலும் போட்டார், அவரை தேடி பல படங்களுக்கு ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடச் சொல்லி வாய்ப்பு வருகிறது. ஆனால் அதை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த நிலையில் அதற்கு அப்படியே எதிர்மாறாக தாங்கள் நடத்தும் இசை நிகழ்ச்சியில் தமன்னாவின் நடனம் வேண்டாம் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டார்களாம் பிரபல பின்னணி பாடகர்களான சங்கர் மகாதேவன், ஹரிஹரன் மற்றும் அனுப் ஜலோட்டா என்கிற மூவர் கூட்டணி.
இந்த டிசம்பர் மாதத்தில் ஆமதாபாத், டில்லி மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் இந்த மூவர் கூட்டணி 'திரிவேணி' என்கிற பெயரில் லைவ் மியூசிக் கான்சர்ட் நடத்த இருக்கின்றனர். இந்தியாவில் முதன்முறையாக மூன்று இசை ஜாம்பவான்கள் ஒரே மேடையில் என்கிற விதமாக இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா மற்றும் நோரா பதேஹி ஆகியோரின் நடனங்களை சேர்க்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் சங்கர் மகாதேவனும், ஹரிஹரனும் நடிகைகளின் இந்த நடன நிகழ்ச்சிக்கு தடை போட்டு விட்டதுடன் இது முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான இசை நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும்.. ரசிகர்கள் இசையில் மட்டும்தான் தங்களை கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கண்டிப்பாக கூறிவிட்டார்களாம்.