இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழில் அம்மா அப்பா செல்லம் என்கிற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் தமிழில் குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தி அங்கேயே தங்கி படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல கடந்த 2010 லிருந்து தற்போது வரை மூன்று திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்று பின் சமீபத்தில் நான்காவதாக ஒரு திருமணமும் செய்து கொண்டதன் மூலம் தொடர்ந்து பரபரப்பான செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த தனது உறவினர் மகளான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா.
திருமணமான கையோடு கொச்சியில் இருந்து வைக்கம் நகருக்கு தனது வசிப்பிடத்தை மாற்றிய பாலா தயவுசெய்து எனக்கு கொடுத்த அதே ஆதரவை எனது மனைவி கோகிலாவுக்கும் தரவேண்டும் என ரசிகர்களிடம். கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இவரது பல திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள், இந்த புதிய திருமணம், இந்த ஜோடிக்கான அதிக வயது வித்தியாசம் என பல விஷயங்களில் சமூக வலைதளங்களில் பலரும் இவர்களை கிண்டல் அடித்து வந்தனர்.
சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியான ஒரு வீடியோவில் பாலாவின் தற்போதைய மனைவி அவரது மாமாவின் மகள் அல்ல என்றும் அவரது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணின் மகள்தான் என்பது போன்றும் ஒரு செய்தி இடம் பெற்று இருந்தது. சோசியல் மீடியாவில் வைரலான இந்த செய்தியை பார்த்த பாலா கடும் கோபம் அடைந்துள்ளார்.
இது குறித்து பதிலடி கொடுக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “என் மனைவியை எப்படி வேலைக்காரி என்று நீங்கள் சொல்லாம். அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது ? இதே நான் உங்கள் மனைவியை அப்படி சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? என் மனைவியின் தந்தை அரசியலில் பிரபலமான ஒரு நபர். நான் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க தயாரான போது வேண்டாம் விட்டுவிடுங்கள் இதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார். ஆனாலும் இப்படி ஒரு செய்தியை பரப்பியதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மட்டும் உறுதி” என்று கூறியுள்ளார் பாலா.