டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் நாளை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் 2டி, 3டி, 4டிஎக்ஸ், ஐமாக்ஸ், ஆகிய வடிவங்களில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது '3 டி' ரிலீஸைத் தள்ளி வைத்துள்ளார்களாம்.
படத்தின் வேலைகள் கடைசி நேரம் வரை நடந்ததால் '3 டி' வேலைகளை திட்டமிட்டபடி முடிக்கவில்லையாம். எனவே, ஒரு வாரம் தள்ளி வைத்து அடுத்த வாரம் டிசம்பர் 13ல் '3 டி'யில் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். பல தியேட்டர்களில் '3 டி'க்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகிய நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது.
3 டி-யில் படத்தைப் பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தைத் தந்துள்ளது.




