Advertisement

சிறப்புச்செய்திகள்

32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வொர்க் பிரம் ஹோம்' - விஜய்யைக் கிண்டலடிக்கும் மீம்ஸ்கள்

04 டிச, 2024 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Work-from-Home-Memes-teasing-Vijay


பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லியும், நிவாரண உதவிகள் வழங்கியும் வருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர் விஜய் நேற்று அவருடைய கட்சி அலுவலகத்தில் செய்த உதவி சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டு 250 குடும்பத்தினரை தனது கட்சி அலுவலகம் இருக்கும் இடமான பனையூருக்கு வரவழைத்து அங்கு அவர்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார் விஜய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி வழங்காமல் இப்படி வீட்டிலிருந்தே உதவி வழங்கி வருவதை மீம்ஸ் போட்டும் பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.

அரசியலை சிலர் சமூக வலைத்தளங்களில் மட்டுமே செய்வதை வழக்கமாக வைத்திருக்க, விஜய், 'வொர்க் பிரம் ஹோம்' பாணியில் அரசியல் செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால், விஜய் ஏதாவது ஒரு இடத்திற்கு விரைவில் நேரில் செல்ல வாய்ப்புள்ளது. அதன் மூலம் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'புஷ்பா 2' -  3டி ரிலீஸ் தள்ளி வைப்பு ?'புஷ்பா 2' - 3டி ரிலீஸ் தள்ளி வைப்பு ? பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை நாடாள வைத்த “நாடோடி மன்னன்” உருவான பின்னணி பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை நாடாள வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
07 டிச, 2024 - 06:12 Report Abuse
N Annamalai ஒர்க் நடந்ததே பாராட்டப்பட வேண்டிய விஷயம் .பேரிடர் உதவிக்கு பாராட்டலாம் .எதை செய்தாலும் கேலி செய்வதே பிழைப்பு .டார்ச் லைட் என்ன செய்தார்? .எரியும் சுடர் குடும்பத்தார் என்ன செய்தார்கள் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)