எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
1940ம் ஆண்டு பி யு சின்னப்பா இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த “உத்தமபுத்திரன்” திரைப்படத்தின் கதையை மீண்டும் படமாக்க ஒருபுறம் எம் ஜி ஆர் பிக்சர்ஸூம், மறுபுறம் வீனஸ் பிக்சர்ஸூம் ஒரே நேரத்தில் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த, 1956ல் ஓர் நாள் நாளிதழ் ஒன்றில் எம் ஜி ராமச்சந்திரன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “உத்தமபுத்திரன்” என்றும், சிவாஜிகணேசன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “உத்தமபுத்திரன்” என்றும் எதிர் எதிரே இரண்டு 'தயாராகிறது' என்ற வாசகத்தோடு விளம்பரங்கள் வெளிவந்த நிலையில், வீனஸ் பிக்சர்ஸார் முந்திக் கொண்டு பழைய உத்தமபுத்திரனை தயாரித்த “மாடர்ன் தியேட்டர்ஸ்” நிறுவனத்தினரை அணுகி, அதன் திரைக்கதை உரிமையை பெற்று, படத் தயாரிப்பு பணியில் தீவிரம் காட்டத் துவங்கினர்.
அதன்பிறகு எம் ஜி ஆர் நடிக்க இருந்த “உத்தமபுத்திரன்” திட்டம் கைவிடப்பட்டது. அந்த திட்டமே எம் ஜி ஆர் இரண்டு வேடங்களில் நடிக்கும் “நாடோடி மன்னன்” என்ற காவியப் படைப்பு உருவாக ஒரு ஆரம்பப் புள்ளியாக மாறியது. சின்ன வயதில் எம் ஜி ஆர் பார்த்து ரசித்த “இப் ஐ வேர் கிங்” என்ற ஆங்கில படத்தின் கதையை எம் ஜி ஆர் சொல்ல, ஆர் எம் வீரப்பன், வித்வான் வே லட்சுமணன், எஸ் கே டி சாமி ஆகியோர் கொண்ட “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்” கதை இலாகா, பின் “நாடோடி மன்னன்” கதையை உருவாக்கியது. படத்தின் வசனங்களை கவியரசர் கண்ணதாசனும், ரவீந்தரும் எழுதியிருந்தனர்.
எம் ஜி ஆரின் “மர்மயோகி” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கே ராமநாத்தான் இந்தப் படத்தை இயக்க வேண்டும் என எம் ஜி ஆர் ஆசைப்பட்டு, அதற்கான முன்பணமும் அவருக்கு கொடுத்திருந்தார். 1956ல் இயக்குநர் கே ராம்நாத்தின் திடீர் மறைவின் காரணமாக எம் ஜி ஆரே படத்தை இயக்கும் நிலை ஏற்பட்டு, இயக்குநர் பொறுப்பினையும் ஏற்றார். எம் ஜி ஆர் இயக்கிய முதல் திரைப்படமாக வெளிவந்தது “நாடோடி மன்னன்”.
எம் ஜி ஆர், பி பானுமதி, எம் என் ராஜம், எம் என் நம்பியார், பி எஸ் வீரப்பா, ஜே பி சந்திரபாபு, எம் ஜி சக்கரபாணி, ஏ சகுந்தலா, டி கே பாலசந்திரன், கே ராம்சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இத்திரைப்படத்தில்தான் 'அபிநய சரஸ்வதி' என்று எல்லோராலும் அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்ட நடிகை பி சரோஜாதேவி என்ற அற்புதமான கலைத் தாரகை முதன் முதலாக நாயகியாக எம் ஜி ஆரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
“தூங்காதே தம்பி தூங்காதே”, “சும்மா கெடந்த நிலத்த கொத்தி” போன்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றது. “இன்னும் பல காலத்துக்கு மக்கள் பேசக் கூடிய ஒரு நல்ல படம். எம் ஜி ஆர் பெற்ற புகழ் தாம் பெற்ற புகழ்” என “நாடோடி மன்னன்” வெற்றி குறித்து அறிஞர் அண்ணா பேசியது போல் எம் ஜி ஆரை நாடாள வைக்க ஆரூடம் சொன்ன அற்புத திரைக் காவியமாய் அமைந்ததுதான் இந்த “நாடோடி மன்னன்”.