Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவாகரத்து அல்லது பிரேக்கப் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் ; ஐஸ்வர்ய லட்சுமி அதிரடி

03 டிச, 2024 - 04:55 IST
எழுத்தின் அளவு:
Divorce-or-breakup-is-the-best-moment-in-a-womans-life;-Aishwarya-Lekshmi-'s-reaction


மலையாளத்தில் 'மாய நதி, கிங் ஆப் கொத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி. தமிழில் 'ஜகமே தந்திரம்', விஷாலின் 'ஆக்சன்' உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த 'கட்டா குஸ்தி' திரைப்படமும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் இவர் ஏற்று நடித்த பூங்குழலி கதாபாத்திரமும் இவரை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. தற்போது கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைப்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்ய லட்சுமி.

சமீபத்தில் மலையாளத்தில் இவர் நடித்த 'ஹலோ மம்மி' என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஒரு மனைவியாக, ஒரு குழந்தைக்கு தாயாக வாழ்க்கையில் பிரச்னையை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்ய லட்சுமி. அதே சமயம் 34 வயதான ஐஸ்வர்ய லட்சுமி இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் விவாகரத்து மற்றும் பிரேக்கப் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பரபரப்பான கருத்துக்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறந்த தருணமாக விவாகரத்து அல்லது பிரேக் அப்பை பார்க்க வேண்டும். எதற்காக விவாகரத்து அல்லது பிரேக்கபை நீங்கள் நாடுகிறீர்கள்? நிச்சயமாக அது உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக தான். அதை நீங்கள் தடை என்று நினைக்காமல் உங்களுடைய வளர்ச்சியின் துவக்கப் புள்ளி என்று நினையுங்கள். முந்தைய தலைமுறையில் காதலர்களுக்குள் முன்கூட்டியே செக்ஸ் என்று ஒன்று முடிந்து விட்டால் உடனடியாக அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்வார்கள்.

ஆனால் இப்போது தலைமுறை மாறி உள்ளது. யாரும் அதில் தேங்கி நிற்க தேவையில்லை. அப்படி நீங்கள் ஒரு தவறான சூழலில் சிக்கி விட்டதாக உணர்ந்து கொண்டால் நீங்கள் திருமணம் ஆனவர் என்றாலும் கூட அதை விட்டு வெளியேறி விட வேண்டும்” என்று கூறியுள்ளார். இவரது துணிச்சலான இந்த கருத்துக்களுக்கு பாராட்டுகளை விட நெட்டிசன்களிடம் இருந்து கடும் விமர்சனங்களே அதிகம் கிடைத்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் சொன்ன வைரல் புகைப்படம்வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் ... இயக்குனர் பாலாவிற்கு விழா இயக்குனர் பாலாவிற்கு விழா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bahurudeen Ali Ahamed - aranthangi,இந்தியா
21 ஜன, 2025 - 12:01 Report Abuse
Bahurudeen Ali Ahamed இதுபோன்ற கேவலமான கருத்துக்களை நடிக நடிகைகள்தான் அதிகபட்சமாக வெளிப்படுத்துகிறார்கள், எந்த காலமாக இருந்தாலும் ஒழுக்கம் மிக அவசியம், தவிர்கமுடியாதபோது விவாகரத்து அவசியம்தான் அதற்காக அதை கொண்டாட முடியாது
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
03 டிச, 2024 - 11:12 Report Abuse
தமிழன் சினிமா நடிகைகளை கட்டிக்கப்போறவன் தியாகியை தவிர வேறு எதுவும் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)