இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
தமிழில் கடைசியாக அரண்மனை 4 படத்தில் நடித்தார் தமன்னா. சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் இவர் நடிப்பில் ஒடேலா 2 படம் வெளியானது. பெரிதும் நம்பிய இந்த படம் தோல்வியை தழுவியது. அதையடுத்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த தமன்னா இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால் மீண்டும் சினிமா பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளார். தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி மீண்டும் புதிய உற்சாகத்துடன் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது ஸ்லிம்மான புகைப்படங்களை இணைய பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறார் தமன்னா.