இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 'புஷ்பா - தி ரைஸ்' என்ற பெயரில் வெளியான நிலையில், இரண்டாவது பாகம், ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2வது பாகத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் 3வது பாகம் பற்றிய 'அப்டேட்' தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களுடன் புஷ்பா படம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3வது பாகமும் வர இருப்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா பேசுகையில், ''புஷ்பா படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதையோ மிஸ் பண்ணும் உணர்வு எனக்குள் வந்தது. என் வாழ்க்கை புஷ்பா படத்திற்கு சமம். பாகம் 1, பாகம் 2 மற்றும் பாகம் 3'' என பேசியிருந்தார்.
இந்த நிலையில், படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் முடிந்ததை குறிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் நிற்க, பின்புற திரையில் 'புஷ்பா-3: தி ராம்பேஜ்' என்ற புகைப்படம் தெரிகிறது. இதனை வைத்து பார்க்கையில் 'புஷ்பா 3' படம் நிச்சயம் வரும் என்பது தெளிவாகிறது. 2வது பாகம் வெளியாவதற்கு முன்பே வெளியான இந்த 3வது பாகம் பற்றிய மறைமுக அப்டேட், 'புஷ்பா 2' மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.