மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் பற்றி தெரியும், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, சரோஜா, குட்டி பத்மினி, ஷாலினி இப்படி பலர். ஆனால் நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தவர் 'செங்கோட்டை கங்காதர கிட்டப்பா' என்கிற பி.ஜி.கிட்டப்பா.
அவரது குடும்பமே நாடக குடும்பம்தான். 1911ம் ஆண்டு கொட்டம்பட்டியில் 'நல்லதங்காள்' நாடகம் நடைபெற்றது. அதில் கிட்டப்பாவின் சகோதரரான செல்லப்பா பெண்வேடமிட்டு நல்லதங்காளாக நடித்தார். நல்லதங்காளின் குழந்தைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா. அதுதான் நாடக உலகில் கிட்டப்பாவின் முதல் பிரவேசம். அடுத்த வருடம் மதுரை டவுன்ஹாலில் நடந்த ஒரு நாடகத்தில், 5 வயது சிறுவனான கிட்டப்பா பாடி நடித்தார். அதே டவுன் ஹாலில் நடந்த மற்றொரு நாடகத்தில் பாதுஷாவின் மகனாக நடித்தார்.
5 வயதில் மேடைப்பிரவேசம் செய்த கிட்டப்பா, தனது 6வது வயதில் சிங்கப்பூர் சென்று சில நாடகங்களில் நடித்தார். பின்பு இலங்கை சென்று நடித்தார். 12வது வயதில் கன்னையா நாடக கம்பெனியில் சேர்ந்தார். அதன் பிறகு சிறப்பு நாடகங்களில் நடித்த அவர் பின்னர் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார்.